நடிகை ஸ்ருதி ஹசன் விரும்பும் ரெசிபி!

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 200 கிராம், பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி, வரமிளகாய் - 3, கடுகு - 1 தேக்கரண்டி, வெந்தயம் - 1/4 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி, துருவிய வெல்லம் - 2 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிது, கொத்தமல்லி தழை - சிறிது, நல்லெண்ணெய் - 150 ml, உப்பு - தேவையான அளவு, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 3, சீரகம் - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி விதை - 2 தேக்கரண்டி, மிளகு - 1/2 தேக்கரண்டி, கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி, வரமிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிது.

மசாலா அரைத்தல்:

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி, சீரகம், கொத்தமல்லி விதை, மிளகு, கடலைப்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, ஆறவைத்து மிக்சியில் விழுதாக அரைக்கவும்.

வெண்டைக்காய் வதக்குதல்

வெண்டைக்காயை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது எண்ணெயில் வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

தாளித்தல்:

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

வதக்கிய வெண்டைக்காய், உப்பு, துருவிய வெல்லம் சேர்த்து கிளறவும்.

சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிரேவி பதத்திற்கு கொதிக்க விடவும்.

கொத்தமல்லி தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

மேலும் அறிய