பார்த்தாலே நாவூறும்... ஆந்திர ஸ்டைல் சிக்கன்; ஈஸி டிப்ஸ்!

சிக்கனை ஊறவைக்க தேவையான பொருட்கள்

சிக்கன் - 1 கிலோ, உப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி.

மசாலா தூள் அரைக்க

தனியா - 1 1/2 மேசைக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, சோம்பு - 1 தேக்கரண்டி, மிளகு - 1 தேக்கரண்டி, ஏலக்காய் - 3, கிராம்பு - 4, காய்ந்த மிளகாய் - 6, காஷ்மீரி மிளகாய் - 4.

சிக்கன் ப்ரை செய்ய

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி, வெங்காயம் - 4 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது - 2 முழு தேக்கரண்டி, அரைத்த மசாலா தூள், உப்பு - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது.

சிக்கனில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 15 நிமிடம் ஊறவிடவும்.

கடாயில் தனியா, சீரகம், சோம்பு, மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, காய்ந்த மிளகாய், காஷ்மீரி மிளகாய் சேர்த்து வறுக்கவும்.

வறுத்ததை நன்கு ஆறவைத்து, பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

அதில் கறிவேப்பிலை மற்றும் ஊறவைத்த சிக்கனை சேர்த்து நன்கு கலக்கவும்.

இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

அரைத்த மசாலா தூளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

மீதமுள்ள மசாலா தூளை சேர்த்து நன்கு கிளறவும்.

உப்பு சேர்த்து, குறைந்த தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.

கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து பரிமாறவும்.

மேலும் அறிய