சப்பாத்தி மீந்து போச்சா? இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க!

சப்பாத்திகளை வச்சு சுவையான, புதுமையான பல ரெசிப்பீஸை செய்யலாம்.

இது உணவு வீணாவதை தடுக்குறது மட்டும் இல்லாம, சமைக்க நேரம் இல்லாதப்போ ஒரு நல்ல ஷார்ட்கட்டாகவும் இருக்கும்.

சப்பாத்தி உப்புமா

மீதமுள்ள சப்பாத்தியை துண்டாக்கி, கடுகு, பருப்பு, வெங்காயம், இஞ்சி, பூண்டு உள்ளிட்டவற்றுடன் வதக்கி, உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து கலக்கி, கொத்தமல்லி தூவி செய்யும் எளிமையான மற்றும் சுவையான காலை உணவுதான் சப்பாத்தி உப்புமா.

சப்பாத்தி ரோல்

சப்பாத்தியில் பன்னீரும் காய்கறிகளும் கலந்து சாஸ் போட்ட ஃபில்லிங் வைத்து சுருட்டி செய்யப்படும் சுவையான ஸ்நாக்ஸ் இது – குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

சப்பாத்தி நூடுல்ஸ்

சப்பாத்தியை நீளமாக நறுக்கி, காய்கறிகளுடன் சாஸ் சேர்த்து வதக்கி செய்தால், நூடுல்ஸ்க்கு பதிலாக சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் ரெடியாகும்.

சப்பாத்தி பீட்ஸா

பீட்ஸா பேஸ் இல்லாத நேரத்தில், சப்பாத்தியை பயன்படுத்தி பீட்ஸா சாஸ், சீஸ், காய்கறிகள் சேர்த்து வெந்து சீஸ் உருகும் வரை சுட்டால் சுலபமாக சப்பாத்தி பீட்ஸா தயாரிக்கலாம்.

சப்பாத்தி சில்லா

சப்பாத்தி துண்டுகளுடன் மாவுப் பொருட்கள், வெங்காயம், மிளகாய் உள்ளிட்டவை சேர்த்து கரைத்துப், தோசை போல சுட்டாலே காரசாரமான மற்றும் ஆரோக்கியமான சப்பாத்தி சில்லா தயார்.

சப்பாத்தி கார போண்டா

சப்பாத்தி பொடியில் வெங்காயம், மாவுகள், மசாலா பொருட்கள் சேர்த்து பிசைந்து, எண்ணெயில் பொரித்தால் சுவையான சப்பாத்தி கார போண்டா தயாராகும்.

சப்பாத்தி சாலட்

பொரித்த சப்பாத்தி துண்டுகளில் காய்கறிகள், மசாலா பொடி, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் சுவையான சப்பாத்தி சாலட் தயார்.

மேலும் அறிய