இருமல், காய்ச்சல் இருக்கா? லஞ்சுக்கு இந்த சாதம் பெஸ்ட்!

தேவையான பொருட்கள்

சாதம் (வடித்தது) - 2 கப், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், பூண்டு - 4-5 பல் (நறுக்கியது), காய்ந்த மிளகாய் - 2 (நறுக்கியது), மிளகு தூள் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி இலைகள் (நறுக்கியது) - சிறிதளவு (அலங்கரிக்க).

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

நறுக்கிய பூண்டு மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வேகவைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்.

மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து பரிமாறவும்.

மேலும் அறிய