நாக்கில் ஒட்டிக் கொள்ளும் சுவை... இட்லிக்கு ஈஸி சாம்பார்!

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – 1 கப், தக்காளி – 2, எண்ணெய் – 2 ஸ்பூன், வெங்காயம் – 1, மஞ்சள் தூள் – 1 ஸ்பூன், புளி, உப்பு, வெல்லம், தண்ணீர் தேவைக்கு ஏற்ப.

சாம்பார் பொடி தயாரித்தல்

தனியா பொடி – 3 , ஸ்பூன், மிளகாய் – 10, வெந்தயம் – 1/4 tsp, துவரம் பருப்பு – 2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 tsp, பெருங்காயத்தூள் – சிட்டிகை, சீரகம் – 1 ஸ்பூன்.

பருப்பை வேகவைத்தல்

ஊற வைத்த துவரம் பருப்பு, தக்காளி, எண்ணெய், வெங்காயம், மஞ்சள் தூள், புளியை சேர்த்து 4 விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

சாம்பார் பொடியை வறுத்து அரைத்தல்

அனைத்து சாம்பார் பொடி பொருட்களையும் கடாயில் லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.

பருப்பை கடைந்தல்

வேகவைத்த பருப்பை அரைத்து மென்மையான மசியான கலவையாக மாற்றவும்.

சாம்பார் கொதிக்க விடுதல்

பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதக்கவும். அதில் கடைந்த பருப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

சாம்பார் பொடி கலந்தல்

கொதிக்கும் பருப்பில் அரைத்த சாம்பார் பொடி சேர்த்து நன்கு கலந்து கொடுக்கவும். உப்பு சேர்க்க மறக்காதீர்கள்.

வெல்லம் சேர்த்து இறக்குதல்

10 நிமிடம் கொதித்த பிறகு, பச்சை வாசனை போனதும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

தாளித்தல் மற்றும் பரிமாறுதல்

கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் வதக்கி சாம்பாரில் சேர்த்து கலக்கவும். இறுதியில் கொத்தமல்லி தூவி இட்லியுடன் பரிமாறவும்.

மேலும் அறிய