முட்டைகோஸ் மட்டும் போதும்... டிபனுக்கு டேஸ்டி டிஷ் ரெடி!

தேவையான பொருட்கள்:

முட்டைக்கோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது), வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது), தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது), இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 1/4 கப், சோம்பு - 1 டீஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், கசகசா - 1 டீஸ்பூன், சமையல் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தேங்காய் துருவல், சோம்பு, மிளகு, சீரகம், கசகசா மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.

நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூளை சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.

நறுக்கிய முட்டைக்கோஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்; அரைத்த விழுதையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றி கலக்கவும்.

முட்டைக்கோஸ் வெந்து கிரேவி பதத்திற்கு வந்ததும், கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

மேலும் அறிய