படி ஏற கூட கஷ்டம்... இந்த லட்டு ஒண்ணு சாப்பிட்டு பாருங்க!

கால்சியம் லட்டு

உங்களுக்கு உடல் வலி இருந்தால் இந்த லட்டு கண்டிப்பாக சாப்பிடுங்கள்

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து - 1 கப், வெள்ளை எள் - 1/2 கப், வெல்லம் - 1 கப் (அ) தேவையான அளவு, நெய் - 2-3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்.

முதலில் கருப்பு உளுந்தை வெறும் வாணலியில் போட்டு, நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்

வறுத்த உளுந்தை ஒரு தட்டில் எடுத்து ஆற வைக்கவும்.

அதே வாணலியில் வெள்ளை எள்ளை போட்டு, அவை வெடிக்கும் வரை வறுக்கவும். வறுத்த எள்ளை தட்டில் ஆற வைக்கவும்.

வறுத்த உளுந்தை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும்.

அரைத்த உளுந்து மாவுடன், வறுத்த எள், பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

கலவையில் நெய் சேர்த்து, லட்டு பிடிக்கும் பதத்திற்கு உருண்டை பிடிக்கவும்.

சுவையான கால்சியம் நிறைந்த லட்டு தயார்.