குக்கரில் டேஸ்டி சர்க்கரைப் பொங்கல்: செஃப் தீனா ரெசிபி

Author - Mona Pachake

தேவையான பொருட்கள்

பச்சை அரிசி - 1 கப் மூங் தால் - 4 டீஸ்பூன் வெல்லம் - 2 கப் தேங்காய் - 2 துண்டு முந்திரி பருப்பு - தேவையான அளவு உலர் திராட்சை - தேவையான அளவு நெய் - 6 முதல் 7 டீஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை

அரிசியும் பருப்பும் தண்ணீரில் 2 மணிநேரமாவது ஊற வேண்டும். இப்போது ஊறிய பின்பு குக்கரில் அதை போட்டு அதே அளவில் 2.5 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வர்ற அளவிற்கு வேக வைக்க வேண்டும்.

இப்போது குக்கரை திறந்து வெந்த அரிசி மற்றும் பருப்பின் மேல் 2 மேஜைகரண்டி அளவிற்கு நெய் ஊற்ற வேண்டும்.

இப்போது இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லம் சேர்க்க வேண்டும். அதில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும். அது கரைந்து ஆறியவுடன் வடிகட்ட வேண்டும்.

பிறகு அந்த வெல்லத்தண்ணீரை அந்த அரிசி பருப்பு கலவியில் ஊற்றி கொஞ்சம் உப்பும் ஏலக்காயையும் சேர்த்து கிளற வேண்டும். அதனுடன் கொஞ்சம் நெய் சேர்க்க வேண்டும்.

இப்போது இன்னொரு பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கொஞ்சம் தேங்காய் சேர்த்து வறுக்கவும். பின்பு முந்திரியும் உலர்ந்த திராட்சையும் சேர்த்து கிளறவும்.

இப்போது எல்லாவற்றையும் ஒன்றாக கிளறி சூடாக இருக்கும் போதே தட்டில் பரிமாறி சாப்பிட்டு பாருங்க...நீங்களே அசந்து போவீங்க.

மேலும் அறிய