இந்த ஒரு பொடி போதும்... எல்லா வகை 65 போடலாம்!

சிக்கன் 65 மசாலா செய்ய தேவையான பொருட்கள்

இஞ்சி பூண்டு விழுது: 2 டீஸ்பூன், மிளகாய் தூள்: 2-3 டீஸ்பூன் (உங்கள் காரத்திற்கேற்ப), கரம் மசாலா: 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள்: 1/4 டீஸ்பூன், தனியா தூள்: 1 டீஸ்பூன், சீரக தூள்: 1/2 டீஸ்பூன், மிளகு தூள்: 1/2 டீஸ்பூன், அரிசி மாவு: 2-3 டீஸ்பூன் (மசாலா ஒட்டவும், மிருதுவாக இருக்கவும்), எலுமிச்சை சாறு: 1 டேபிள்ஸ்பூன், தயிர்: 2 டேபிள்ஸ்பூன் (புளிப்புக்கு), உப்பு: தேவைக்கேற்ப, எண்ணெய்: பொரிக்க தேவையான அளவு.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மசாலா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும்.

கலவையில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, பிசிறி குறைந்தது 30 நிமிடங்களாவது ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும், மசாலா தடவிய சிக்கன் துண்டுகளை போட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

சுவையான சிக்கன் 65 தயார்!

இதை சூடாக, வெங்காயம் மற்றும் எலுமிச்சையுடன் சேர்த்து பரிமாறவும்.

சுவையான சிக்கன் 65 தயார்! இந்த மசாலாவை காளிபிலோவேர் 65 செய்வதற்கு கூட பயன்படுத்தலாம்.

மேலும் அறிய