ஒரு துண்டு சேர்த்து... இட்லிக்கு ஏற்ற தண்ணி சட்னி!

தேவையான பொருட்கள்

தேங்காய் - 1 கப் (துருவியது), பச்சை மிளகாய் - 2-3 (உங்கள் காரத்திற்கு ஏற்ப), இஞ்சி - ஒரு சிறு துண்டு, பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் - 4-5, கறிவேப்பிலை - ஒரு கொத்து, எண்ணெய் - தாளிக்க, கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க, உப்பு - தேவையான அளவு, புளி - ஒரு சிறிய துண்டு (விரும்பினால்).

மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

அது கூடவே ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து அரைக்கவும்.

அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

தாளித்ததை சட்னியில் சேர்த்து கலக்கவும்.

சுவையான தேங்காய் சட்னி தயார்!

இதனை இட்லி, தோசை போன்றவற்றுடன் பரிமாறவும்.

மேலும் அறிய