ஒரு கப் ரவைக்கு இவ்வளவு நெய் ஊத்தி எடுத்தா... பேக்கரி ஸ்டைல் ஸ்வீட் ரெடி!

தேவையான பொருட்கள்

ஒரு கப் துருவிய தேங்காய் அரை கப் ரவை 1 1/4 கப் சர்க்கரை ஒரு சிட்டிகை உப்பு கால் டேபிள் ஸ்பூன் ஏலக்காய் 2 டேபிள் ஸ்பூன் நெய்

முதலில் ஒரு சிறிய கடாயில் துருவிய தேங்காயை சேர்த்து, ஈரப்பதம் நீங்கும் வரை வறுக்கவும்.

தேங்காயை எடுத்தவுடன் அதே கடாயில் ரவையை லேசாக நிறம் மாறும் வரை வறுத்து, தேங்காயுடன் சேர்க்கவும்.

அதே கடாயில் சர்க்கரை, தேவையான தண்ணீர், சிட்டிகை உப்பு, ஏலக்காய் தூளை சேர்த்து கம்பிப்பதம் வரை காய்ச்சவும்.

சர்க்கரை பாகு கொதிக்கும்போது, ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறவும்.

பாகு தயாரானதும் அதில் வறுத்த தேங்காய் மற்றும் ரவையை சேர்த்து நன்கு கிளறவும்.

கடாயில் ஒட்டாமல் இருக்க மேலும் நெய் சேர்த்து, கலவை கெட்டி பதம் வரும் வரை கிளறவும்.

கலவை தயார் ஆனதும், அடுப்பில் இருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் பரப்பி விடவும்.

வெதுவெதுப்பாக இருக்கும்போது, கலவையை சதுர வடிவில் வெட்டவும்.

தேங்காய் ரவை பர்பி சுவையாகத் தயார். இது மழைக்கால மாலை நேர ஸ்நாக்ஸ்க்கு சிறந்த தேர்வாகும்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது.

மேலும் அறிய