இட்லி மாவில் ஜாங்கிரி: ரொம்ப ஈசி

Author - Mona Pachake

பரபரப்பான பொங்கல் வேளையில் நிறைய வேலைப்பாடுகள் உள்ள இனிப்புகள் செய்வது கடினம் தான்.

அந்த சாமத்தில் இந்த இன்ஸ்டன்ட் ஜிலேபியை ட்ரை பண்ணி பாருங்க. இதுக்கு இட்லி மாவு மட்டுமே போதுமானது.

இப்போது ஒரு சாஸ் பான் எடுத்து அதில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து அரை கப் தண்ணீரும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு பாகு காய்த்து எடுத்துக்கொள்ளவும். கொஞ்சம் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளவும்.

அது ஆறுவதற்கு ஒரமாக வைத்து விட்டு இட்லி மாவை ஒரு கோப்பையில் எடுத்து அதில் உப்பு ஒரு சிட்டிகை சேர்க்கவும்.

இதில் இப்போது ஆப்ப சோடா மாவு, ஆரஞ்சு கலர் மற்றும் ஒன்றரை ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்துக்கொள்ளவும்.

அதை நன்கு கலந்தவுடன், வீட்டில் இருக்கும் ஏதாவது கவர் எடுத்து அதில் மாவை ஊற்றி முனையில் ஒரு சிறிய ஓட்டை போடு ஜாங்கிரி பிழிவதற்கு ஏற்ற மாதிரி செய்து கொள்ளுங்கள்

இப்போது ஒரு கடையில் என்னை ஊற்றி, என்னை சூடான பிறகு ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாதபடி பிழியவும்.

அது நன்கு பொரிந்தவுடன் அதை எடுத்து அந்த ஜீராவில் சேர்த்து ஊற வைத்து சாப்பிடவும்.

பரபரப்பான நேரத்தில் இப்படி உங்கள் குடும்பத்தினருக்கு செய்து அசத்துங்கள்.

மேலும் அறிய