மொறு மொறு இறால் 65: இந்த மசாலா மட்டும் முக்கியம்!

தேவையான பொருட்கள்

இறால் - 250 கிராம் (சுத்தம் செய்தது), காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன், சில்லி 65 மசாலா - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், முட்டை - 1, உப்பு - தேவையான அளவு, கான்ஃப்ளார் மாவு - 1 1/2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - 1/2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, எலுமிச்சை சாறு - 1/2 பழம்.

ஒரு பாத்திரத்தில் இறாலை எடுத்துக் கொள்ளவும்.

தில், மிளகாய் தூள், மல்லித்தூள், சில்லி 65 மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அடுத்து, கான்ஃப்ளார் மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து, 15-20 நிமிடங்கள் ஊற விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள இறாலை போட்டு பொரித்தெடுக்கவும்.

பொன்னிறமாக வெந்ததும், எண்ணெயிலிருந்து எடுத்து சூடாக பரிமாறவும்.

சுவையான இறால் 65 தயார்!

மேலும் அறிய