ஜீரோ கலோரி உணவு... இவங்க மட்டும் சாப்பிடுங்க!

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் - 1, தேங்காய் துருவல் - 1/2 கப், சீரகம் - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1 அல்லது 2 (காரம் ஏற்ப), தயிர் - 1/4 கப் (விரும்பினால்), எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

வெள்ளரிக்காயைத் தயார் செய்தல்

வெள்ளரிக்காயை தோல் சீவி, நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வெள்ளரிக்காயை வேகவைத்தல்

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதித்ததும், நறுக்கிய வெள்ளரிக்காயை சேர்த்து மூடி போட்டு சிறிது நேரம் வேக விடவும்.

விழுதை அரைத்தல்

மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

கலத்தல்

வெந்த வெள்ளரிக்காயுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும்.

தாளித்தல்

ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, கறிவேப்பிலை சேர்க்கவும்.

பரிமாறுதல்

இந்த தாளிப்பை பச்சடியுடன் சேர்த்து நன்றாக கலந்து, விருப்பப்பட்டால் தயிர் சேர்த்தும் பரிமாறலாம்.

இந்த பச்சடி சாதம், சாம்பார், அல்லது பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் அறிய