பேச்சுலர்ஸ், ஆபீஸ் போகும் மக்களுக்கு பெஸ்ட் ரெசிபி!

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசி - 1 கப், நெய் - 2-3 டேபிள் ஸ்பூன், பட்டை - 1 துண்டு, கிராம்பு - 2-3, ஏலக்காய் - 2, பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), வெங்காயம் - 1 (நறுக்கியது), உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது), தண்ணீர் - 2 கப்.

அரிசியை இரண்டு, மூன்று முறை நன்றாக கழுவி, 20 நிமிடம் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடாக்கவும்.

சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

ஊறவைத்த அரிசியை சேர்த்து கிளறவும்.

2 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கிளறி, மூடி போட்டு வேக வைக்கவும்.

சாதம் வெந்ததும், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

அவ்வளவு தான்... சுவையான ஈஸியான நெய் சோறு தயார்!

மேலும் அறிய