மாவு புளிக்க வேணாம்... சாஃப்ட் இட்லிக்கு ஈஸி டிப்ஸ்!

தேவையான பொருட்கள்

ரவை - 1 கப், தயிர் - 1/2 கப், இஞ்சி - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் - 1-2 (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது), கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்து, தயிர் சேர்த்து, நன்றாக கிளறவும்.

இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

தாளித்ததை மாவில் ஊற்றி, நன்றாக கிளறவும்.

இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, ஆவியில் வேக வைக்கவும்.

சுவையான ரவை இட்லி தயார்!

மேலும் அறிய