ஸ்கூல், ஆபிஸ் போகும் மக்களுக்கு... ஈஸி லஞ்ச்!

தேவையான பொருட்கள்

சாதம் (வேக வைத்தது), புதினா இலைகள், முட்டை, எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பெரிய வெங்காயம் (நறுக்கியது), பச்சை மிளகாய் (நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி இலைகள் (நறுக்கியது), எலுமிச்சை சாறு (விருப்பப்பட்டால்).

சாதத்தை உதிரியாக வேகவைத்துக்கொள்ளவும்.

புதினாவை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.

வேகவைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்.

புதினா விழுதை சேர்த்து கிளறவும்.

கொத்தமல்லி இலைகளை தூவி கிளறவும்.

எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி பரிமாறவும்.

அவ்வளவு தான்... சுவையான மின்ட் ஏக் ரைஸ் தயார்!

மேலும் அறிய