சட்டி சோறு காலி... ஒருமுறை இப்படி மீன் குழம்பு வச்சுப் பாருங்க!

தேவையான பொருட்கள்

மீன் - 500 கிராம் (வறுத்த மீன் துண்டுகள்), சின்ன வெங்காயம் - 10-15 (நறுக்கியது), பூண்டு - 5-6 பல் (நறுக்கியது), தக்காளி - 2 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), கறிவேப்பிலை - ஒரு கொத்து, புளி - எலுமிச்சை அளவு (சாறு எடுக்கவும்), மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, மல்லி தூள் - 3 தேக்கரண்டி, வெந்தய தூள் - 1/2 தேக்கரண்டி, எண்ணெய் - 3-4 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, வெந்தயம் - 1/2 தேக்கரண்டி, பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, மல்லி இலை - சிறிதளவு (நறுக்கியது).

மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், வெந்தய தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

புளி கரைசல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்த்து 10-15 நிமிடங்கள் வேக விடவும்.

நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

அவ்வளவு தான்....

தெருவையே இழுக்கும் மீன் குழம்பு தயார்!

மேலும் அறிய