சைடிஷ் எதுவும் வேணாம்... இந்த ரைஸ் தட்டு தட்டா சாப்பிடலாம்!

தேவையான பொருட்கள்

சீராக சம்பா அரிசி - 1 கப், நெய் - 2-3 டேபிள் ஸ்பூன், பட்டை - 1 துண்டு, கிராம்பு - 2-3, ஏலக்காய் - 2, பிரியாணி இலை - 1, வெங்காயம் - 1 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், தக்காளி - 1 (நறுக்கியது), புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - தேவையான அளவு.

முதலில் அரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

ஒரு குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

கழுவிய அரிசியை சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.

தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி, ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.

விசில் போனதும், குக்கரை திறந்து சாதத்தை மெதுவாக கிளறி, சூடாக பரிமாறவும்.

மேலும் அறிய