ரொம்ப ரொம்ப சத்து... மொறு மொறுன்னு பயிறு வடை!

தேவையான பொருட்கள்

பச்சை பயறு - 1 கப், வெங்காயம் - 1 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கியது), இஞ்சி - 1/2 அங்குலம் (துருவியது), கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது), சோம்பு - 1/2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு.

பச்சை பயறை 4-5 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய பயறை நீரை வடிகட்டி, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

அரைத்த பயறு மாவுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

கலந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, தட்டையான வடைகளாக தட்டி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், வடைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சுவையான பச்சை பயறு வடை தயார்!

மேலும் அறிய