ஒரு மணி நேரத்தில் தயிர் ரெடி: இது எப்படி?
Author - Mona Pachake
முதலில் ஒரு அரை லிட்டர் பால் எடுத்து காய்த்துக்கொள்ள வேண்டும்.
அந்த பால் காய்ந்தவுடன் விரல் பொறுக்கும் சூட்டிற்கு வந்த பிறகு அதை எடுத்து ஒரு டிபன் பாக்சில் மாற்றவும்.
இப்போது நல்ல கெட்டியான தயிரை எடுத்து அரை லிட்டர் பாலில் நான்கு மேஜைக்கரண்டி தயிரை கலக்கவும்.
இப்போது ஒரு குக்கர் அல்லது ஒரு ஹோட்பாக்ஸில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி அதில் இந்த டிபன் பாக்ஸை மூடி எடுத்து உள்ளே வைக்க வேண்டும்.
இப்போது ஹாட் பாக்ஸை இறுக்கமாக மூடி விடவும்.
குக்கராக இருத்தால் கேஸ்கெட் போட்டு, டைட்டாக மூடி விசிலும் போட்டு மூடிவிடவும்.
இப்போது 60 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து பார்த்தால் உங்கள் கெட்டியான தயிர் ரெடியாக இருக்கும்.
மேலும் அறிய
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்