சூடான சாம்பார் சாதம்: செஃப் டிப்ஸ்

தேவையான பொருட்கள்

அரிசி - 1 கப், துவரம் பருப்பு - 1/2 கப், புளி - ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு, சாம்பார் வெங்காயம் - 10, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 2, கலந்த காய்கள் - 2 முதல் 3 கப் வரை.

முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு அலசி நான்கு கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

பிறகு அந்த தண்ணீரை வடித்துவிட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு, நெய், ப.மிளகாய், பூண்டு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரை வேக விடவும்.

பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெட்டி வைத்த காய்கறியை போட்டு அத்துடன் சாம்பார் பவுடர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

குக்கராக இருந்தால் காய்கறிகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசிலுக்கு வேக விடவும்.

காய்கறி வெந்ததும் புளி கரைசல் விட்டு நன்கு கொதித்ததும் நன்கு வெந்த பருப்பு சாதத்தை கலந்து விடவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சாதத்தோடு சேர்த்து கிளறி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

அவ்வளவு தான்... சுட சுட சாம்பார் சாதம் தயார்!

மேலும் அறிய