தேங்காய் சிரட்டை போதும்... வட்ட வட்டமாக உளுந்த வடை ரெடி!

மெதுவடை செய்யத் தேவையான பொருட்கள்

உளுந்து-250கிராம், சிறிய உருளைக்கிழங்கு-1 (வேக வைத்து, தோல் உரித்தது), இஞ்சி-சிறிதளவு (பொடியாக நறுக்கியது), மிளகு,சீரகம்-1/4 ஸ்பூன், பெருங்காயம்-2 சிட்டிகை, வெங்காயம்-1 (பொடியாக நறுக்கியது), பச்சைமிளகாய்-1 (பொடியாக நறுக்கியது), சோடா உப்பு-1 சிட்டிகை, கருவேப்பிலை- 1 கொத்து, அரிசி மாவு-1 டேபிள்ஸ்பூன்.

முதலில் உளுந்தை நன்கு அலசிவிட்டு அவற்றுடன் தண்ணீர் சேர்த்து சுமார் 1 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் ஒரு மிக்சியில் ஊற வைத்திருக்கும் உளுந்தம் பருப்பை அதில் இட்டு அரைத்து கொள்ளவும். அவை 50 சதவிகிதம் நன்றாக அரைந்து இருக்கும் போது வேக வைத்து தோலுரித்துள்ள உருளைக்கிழங்கை மசித்து அந்த மாவில் சேர்த்து கொள்ளவும்.

மாவு வடை சுடும் பதத்திற்கு நன்கு அரைத்தததும், ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துகொள்ளவும்.

இப்போது அரைத்து வைத்துள்ள வடை மாவுடன் இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காயம், வெங்காயம், பச்சைமிளகாய், சோடா உப்பு, கருவேப்பிலை, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு ஆகிய்வற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ளவும்.

வாழை இலை வைத்து வடை...

தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அவற்றில் அரைத்துவைத்துள்ள மாவை கையில் வாழை இலை வைத்து வடை வடிவில் தட்டி எண்ணெயில் இட்டு பொரித்துக் எடுக்கவும்.

ஆனால் இது உங்களுக்கு கடினமாக இருந்தால் உங்களுக்கு ஒரு தேங்காய் சிரட்டை போதும்.

தேங்காய் சிரட்டை

ஒரு சிரட்டை எடுத்து அதற்குள் மாவை தட்டி ஓட்டை போட்டு எண்ணையில் போட்டால் வடை சுடும் போது சுலபமாக இருக்கும்.

இப்போது உங்கள் மெது வடை தயார்!

மேலும் அறிய