அரிசி, உளுந்து ஊற வைக்க வேணாம்... சூடான மொறு மொறு வடை ரெடி!

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி - 1 கப் வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 வறுத்த வேர்க்கடலை - 1/2 கப் பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது இஞ்சி - 1/2 துண்டு பொடியாக நறுக்கியது எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம் சீரக தூள் - 2 தேக்கரண்டி கொத்தமல்லி இலை உப்பு எண்ணெய் - பொரிப்பதற்கு

ஜவ்வரிசியை ஒரு பாத்திரத்தில் நன்கு கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

வறுத்த வேர்கடலையை மிக்சியில் தூளாக அரைக்கவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து நன்கு மசிக்கவும்.

உருளைக்கிழங்குடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரக தூள், உப்பு சேர்க்கவும்.

ஊறவைத்த ஜவ்வரிசி, அரைத்த வேர்கடலை, கொத்தமல்லி இலை, எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.

ஜவ்வரிசி வடை தயார், பரிமாறவும்!

மேலும் அறிய