லெக் பீஸ் ப்ரை... கல்யாண வீட்டு ஸ்டைலில் செஞ்சு அசத்துங்க!

தேவையான பொருட்கள்

20 சிக்கன் லெக் பீஸ் , 100g பூண்டு விழுது, 50g இஞ்சி , பூண்டு விழுது , 25g சில்லி சிக்கன் பொடி ,100g கார்ன்ப்ளோர் மாவு , 25g அரிசி மாவு , 20g உப்பு, 2 எலும்பிசை பழ சாறு, 2 முட்டை.

முதலில் சிக்கன் லெக் பீஸ்களை அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு நன்கு அலசி எடுத்து கொள்ள வேண்டும்

அரிசி கழுவிய தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து பின் அலசி எடுப்பதால் சிக்கன் லெக் பீஸ் கள் மிருதுவாக இருக்கும். சாப்பிட சுவையாக இருக்கும். பின்னர் ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு பேஸ்ட், சில்லி சிக்கன் மசாலா, கான்பளார் மாவு, உப்பு, அரிசி மாவு, லெமன் சாறு, 2 முட்டை உடைத்து ஊற்றி மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

மசாலா

பின்னர் மிக்ஸ் செய்து வைத்த மசாலா உடன் சிக்கன் லெக் பீஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்

ஊற வேண்டும்

10 நிமிடங்கள் மசாலா சிக்கன் லெக் பீஸ்களுடன் மிக்ஸ் ஆகும் வரை நன்கு ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பொறித்து எடுக்கவும்

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் ஊறவைத்த சிக்கன் லெக் பீஸ்களை 10 நிமிடங்கள் ஸ்லோ பிலேமில் பொறித்து எடுக்கவும்.

கறிவேப்பிலை

மேலும் அதே பொறித்த எண்ணெயில் கறிவேப்பிலை போட்டு பொறித்து பொறித்த சிக்கன் லெக் பீஸ்களின் மேல் தூவ வேண்டும்.

கல்யாண வீட்டு ஸ்டைல் மொறு மொறு லெக் பீஸ் ப்ரை ரெடி!

மேலும் அறிய