சேனை கூட்டு... கல்யாண வீட்டு ஸ்டைலில் செஞ்சு அசத்துங்க!

தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு - 250 கிராம், தேங்காய் - 1/2 மூடி, பச்சை மிளகாய் - 2-3, சீரகம் - 1 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு, கொத்தமல்லி தழை.

சேனைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, பொடியாக நறுக்கவும்.

தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து விழுது அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

நறுக்கிய சேனைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கிளறவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

சேனைக்கிழங்கு நன்கு வெந்ததும், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

கல்யாண வீட்டு ஸ்டைலில் சேனை கிழங்கி பொரிச்ச கூட்டு தயார்!

மேலும் அறிய