காரசாரமான இந்த ஒரு குழம்பு: தட்டு சோறு காலி!

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை - 1/2 கப், கொண்டைக்கடலை - 1/2 கப், காராமணி - 1/2 கப், சின்ன வெங்காயம் - 10-12, தக்காளி - 2 (நறுக்கியது), பூண்டு - 6-8 பற்கள், இஞ்சி - சிறு துண்டு, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, மல்லி தூள் - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு, புளி - ஒரு எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு.

வேர்க்கடலை, கொண்டைக்கடலை மற்றும் காராமணியை தனித்தனியாக வேக வைக்கவும்.

குக்கரில் வேக வைத்தால், சீக்கிரம் வெந்துவிடும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின், நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்து, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

வேக வைத்த பயிர்களை வதக்கிய மசாலாவில் சேர்த்து கிளறவும்.

புளியை கரைத்து, புளித் தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்.

குழம்பு நன்கு கொதித்து, கெட்டியானதும், கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சுவையான வேர்க்கடலை, கொண்டைக்கடலை, காராமணி காரக்குழம்பு தயார்.

மேலும் அறிய