தட்டு சோறு காலியாக... இந்த ஒரு டிஷ் போதும்!

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் - 250 கிராம் (நறுக்கியது), எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு கொத்து, வரமிளகாய் - 3 (விருப்பத்திற்கேற்ப), வெங்காயம் - 1 (நறுக்கியது), தக்காளி - 2 (நறுக்கியது), மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் (விருப்பத்திற்கேற்ப), தனியாத்தூள் - 1 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு (கரைசல்), உப்பு - தேவையான அளவு, வெல்லம் - ஒரு சிறிய துண்டு (விருப்பத்திற்கேற்ப).

கத்திரிக்காயை கழுவி, நறுக்கி, உப்பு தண்ணீரில் போட்டு வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.

புளி கரைசலை சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

கத்திரிக்காயை சேர்த்து, வெல்லம் சேர்த்து, மூடி போட்டு வேக விடவும்.

கத்திரிக்காய் வெந்ததும், தொக்கு பதத்திற்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

சுவையான கத்திரிக்காய் தொக்கு தயார்.

மேலும் அறிய