மீந்து போன இட்லி கூட லெமன்... டேஸ்ட் வேற லெவல்!

Author - Mona Pachake

தேவையான பொருட்கள்

வேக வைத்த இட்லி - தேவையான அளவு, எண்ணெய் - 2 ஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

வேக வைத்த இட்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

நறுக்கிய இட்லியை கடாயில் சேர்த்து நன்றாக கிளறவும்.

பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.

கடைசியாக எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.

அவ்வளவு தான்...சூடான சுவையான லெமன் இட்லி தயார்!

மேலும் அறிய