மொறு மொறு தோசைக்கு பெஸ்ட்... மதுரை பேமஸ் சட்னி!

தேவையான பொருட்கள்

பூண்டு - 1/2 கப், வரமிளகாய் - 1/4 கப், சின்ன வெங்காயம் - 1/4 கப், கறிவேப்பிலை - சில, புளி - சிறிது, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - சிறிதளவு, கடுகு - தாளிக்க, உளுந்து - தாளிக்க.

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும், பூண்டு, வரமிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

வதக்கிய பொருட்களை ஆற வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

இறுதியாக, ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்த சட்னியில் சேர்த்து கலக்கவும்.

சுவையான மதுரை பூண்டு கார சட்னி தயார்!

இதை இட்லி அல்லது தோசையும் சேர்த்து பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்

மேலும் அறிய