மாம்பழம் வச்சு டேஸ்டி கேசரி: சீசன் முடியுறதுக்குள்ள செஞ்சு அசத்துங்க!

Author - Mona Pachake

தேவையான பொருட்கள்

ரவை - 1 கப், மாம்பழ கூழ் - 1 கப் (சுமார் 2 மாம்பழங்கள்), சர்க்கரை - 1 1/4 கப் (அல்லது சுவைக்கேற்ப), நெய் - 1/4 கப், ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி, முந்திரி, திராட்சை (விருப்பப்பட்டால்).

கடாயில் நெய் ஊற்றி சூடாக்கவும்

அதில் ரவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வறுக்கவும். வறுத்த ரவையை தனியாக எடுத்து வைக்கவும்

அதே கடாயில் மாம்பழ கூழ் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்

அதே கடாயில் மாம்பழ கூழ் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும். சர்க்கரை நன்றாக கரையும் வரை கிளறவும்.

வறுத்த ரவையை மாம்பழ கூழ் கலவையில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறவும்.

கலவை கெட்டியானதும், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்

நெய் சேர்த்து கிளறி, அடுப்பை அணைக்கவும்.

விருப்பப்பட்டால், நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து கேசரியில் சேர்க்கவும்.

சூடான மாம்பழ கேசரியை பரிமாறவும்

மேலும் அறிய