பஞ்சு போல மெது வடை... வெங்கடேஷ் பட் ரெசிபி

Author - Mona Pachake

முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்போது தஃண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு அந்த உளுந்தை மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும்.

மிகவும் சிறிதளவு தண்ணீர் நடுவில் ஊற்றி ஊற்றி அரைக்க வேண்டும். வடை தட்டும் பதத்திற்கு அந்த உளுந்து அறைந்து வந்தவுடன் அதை வேறு பாத்திரத்தில் மாற்றவும்.

இப்போது அந்த மாவில் அரை டீஸ்பூன் பெருங்காயம், அதே அளவிற்கு உப்பும் சேர்த்து அந்த மாவில் கலக்கவும்.

இப்போது ஒரு துண்டு இஞ்சி எடுத்து சின்ன சின்னதாக நறுக்க வேண்டும். அதனுடன் இரண்டு பச்சை மிளகாயையும் வெட்டி இரண்டையும் மாவில் சேர்த்து கிளற வேண்டும்.

மாவை அரைத்து பிரிட்ஜ்ல் வைத்து அடுத்த நாள் பயன்படுத்தினாலோ, வெளியில் வைத்து சிறிது நேரம் கழிந்து வடை தட்டினாலோ, அந்த மாவு அதிகமாக என்னை குடிக்க வாய்ப்புள்ளது.

இப்போது ஒரு கடாயில் என்னை ஊற்றி சூடானவுடன் மாவை கையால் எடுத்து ஓட்டை போட்டு எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

இந்த பொங்கலுக்கு உங்கள் வீட்டில் இந்த சிம்பிள் ரெஸிபியை ட்ரை பண்ணி பாருங்க.

மேலும் அறிய