ஒரே இடத்தில் முடங்கியவர்களையும் இயக்க செய்யும் அருமருந்து என்று சொல்லப்படுகிறது. அதை வைத்து தினமும் சூப் செய்து குடித்தால் மிகவும் நல்லது.
முடவாட்டுக்கால் - 200 கிராம் இஞ்சி பூண்டு விழுது -3 டீஸ்பூன் மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் ( தேவையெனில்) தேங்காய்த்துருவல் - 3 டீஸ்பூன் ( தேவையெனில்) சின்ன வெங்காயம் - பொடியாக நறுக்கியது அரை கப் தக்காளி - பொடியாக நறுக்கியது அரை கப் இலவங்கப்பட்டை - சிறு துண்டு பூண்டு - 3 பல் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப கொத்துமல்லித்தழை விரும்பினால் சேர்க்கலாம்.
இதை நன்றாக கழுவி மேல் தோலில் இருக்கும் ரோமங்களையும் அதன் புறணியையும் நீக்கி சுத்தம் செய்யவும். பிறகு சிறு துண்டுகளாக வெட்டிகொள்ளவும். முடவாட்டுக்கால் துண்டுகளாக சாப்பிட பிடிக்காதவர்கள் தோலை நீக்கி நன்றாக மைய அரைத்தும் பயன்படுத்தலாம்.
இஞ்சி, பூண்டு, கசகசா, தேங்காய்த்துருவல் அனைத்தையும் சேர்த்து மைய அரைக்கவும். சின்ன வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு இலவங்கப்பட்டை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.
இவை வதங்கியதும் முடவாட்டுக்கால், அரைத்த மசாலா சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டு கொதிக்க விடவும். இது 20 நிமிடங்கள் வரை கொதிக்க வேண்டும். பிறகு இறக்கி பூண்டு தட்டி போட்டு இதை சூப் போல் டம்ளரில் விட்டு உப்பு, மிளகுத்தூள் தூவி குடிக்கவும்.
தொடர்ந்து 10 முதல் 15 நாட்கள் வரை தினமும் ஒரு டம்ளர் வீதம் குடித்து வந்தால் முடக்குவாதம், மூட்டுவலி ஓரளவு கட்டுப்படுவதை பார்க்கலாம்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்