இந்த முடவாட்டுக்கிழங்கில், கால்சியம், வைட்டமின், பாஸ்பரஸ், புரதம், தாது உப்புக்கள் நிறைந்திருக்கின்றன. முடவாட்டுக்கால் கிழங்குகள் நம்முடைய உடலில் கிட்டதட்ட 4000 நோய்களை தீர்க்குமாம்.
சீசன் இல்லாத நேரங்களில் இந்த கிழங்கின் மேல் பகுதி சுருங்கிவிடுவதுடன், அதிலுள்ள நீர்ச்சத்தும் போய்விடும். அதனால்தான் இதை பதப்படுத்துவதற்காக மணல்களில் புதைத்து வைப்பார்களாம்.
சிறுநீரகம் சுருங்குதல், உள்ளுறுப்பு சுருங்குதல், புற்றுநோய் என பல்வேறு நோய்களுக்கு முடவாட்டுக்கால் கிழங்கு அருமருந்தாகும். இந்த கிழங்கின் மேல் பகுதியை சுத்தம் செய்து, சுடுநீரில் போட்டு குளித்து வந்தால், சரும அலர்ஜி, அரிப்பு, சொறி, சிரங்குகள் எதுவானாலும் விலகிவிடும்.
எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள், நரம்பு, தசைகளில் ஏற்படும் கோளாறுகள், மூட்டுவலி போன்றவற்றிற்கு மிகச்சிறந்த நிவாரணியாக இந்த கிழங்கு விளங்குகிறது. ஆர்தரைட்டிஸ் பாதிப்புகளையும் சரிசெய்யக்கூடியது இந்த முடவாட்டுக்கால் கிழங்கு
500 வகைகளுக்கு மேல் முடக்குவாதம் உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் எந்தவிதமான முடக்குவாத நோயாக இருந்தாலும், அதன் தீவிரத்தையும் இந்த ஒரே கிழங்கு குறைத்துவிடும்.
குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த கிழங்கின் சூப்பை சாப்பிட வேண்டுமாம்.. வயதானவர்களுக்கும் எலும்புகளின் பலத்தை அதிகரிக்க செய்யும் சக்தி இந்த கிழங்குகளுக்கு உண்டு.. எலும்பு மூட்டுகளுக்கு இடையேயுள்ள மஜ்ஜையை நன்றாக உறுதியாக வளர்க்கவும் பயன்படுகின்றது.
காய்ச்சல், செரிமான கோளாறுகள், கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்ற அனைத்துக்குமே, இந்த கிழங்கு மருந்தாகிறது. பவுடர் வடிவில் இந்த கிழங்கு, மருந்து கடைகளில் கிடைக்கிறது.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்