இயற்கை வயாகரா... முருங்கை கீரையில் இவ்வளவு நன்மைகளா!

Author - Mona Pachake

முருங்கை மரத்தில் கிடைக்கும் காய், பூ, விதைகளை ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இதில் தெரிந்து கொள்ளுங்கள்.

முருங்கை பூ மற்றும் கீரையை சம அளவில் எடுத்து நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கி அதனுடன் வறுத்த வேர்க்கடலையை இடித்து போட்டு சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும்.

விந்து தண்ணீர் போன்று இருந்தால் முருங்கை விதைகளை நெய்யில் வறுத்து பொடியாக அரைத்து பாலுடன் காய்ச்சி குடித்து வரவே விந்து கெட்டிப்படுவதுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மேலும் நரம்புகள் வலுபெறும்.

முருங்கை விதையில் வைட்டமின் A, C, B மட்டுமல்லாமல் 30 விதமான ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் உள்ளதால் பெரும்பாலும் இவை லேகியம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவே ரத்தசோகை பிரச்சனை நீங்கிவிடும்.

முருங்கை விதையில் அதிக அளவில் ஜிங்க் சத்துக்கள் இருப்பதால் அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் சர்க்கரை நோய் வராமலும் தடுக்கிறது.

மேலும் அறிய