இந்தியாவில் இத்தாலி... பாஸ்தாவை இப்படி செஞ்சி பாருங்க!

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை - 1 கப், பாஸ்தா - 2 கப் (வேக வைத்தது), வெங்காயம் - 1 (நறுக்கியது), தக்காளி - 1 (நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, மசாலா பொடி - (மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள்), எண்ணெய் - தேவையான அளவு, கொத்தமல்லி தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

முருங்கைக்கீரையை சுத்தம் செய்து, வேகவைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

வதக்கிய கலவையில் மசாலா பொடிகளை சேர்த்து கிளறவும்.

பின்னர் வேகவைத்த முருங்கைக்கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

இதை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்!

மேலும் அறிய