வெயிட் லாஸ் பண்ணும் மக்களே... உங்க லிஸ்டில் இந்த ரெசிபியை கொஞ்சம் சேருங்க!

தேவையான பொருட்கள்

மட்டை அரிசி - 1 கப், கொள்ளு - 1/4 கப், தக்காளி - 2 (நறுக்கியது), புளி - எலுமிச்சை அளவு, பூண்டு - 4-5 பல், சீரகம் - 1 தேக்கரண்டி, மிளகு - 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு கொத்து, எண்ணெய் - 2 தேக்கரண்டி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் - தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப.

மட்டை அரிசியை கழுவி, 3 கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

நறுக்கிய தக்காளி, பூண்டு, சீரகம், மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

புளியை கரைத்து ஊற்றி, கொள்ளு, பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும்.

ஊறவைத்த அரிசியை சேர்த்து, உப்பு போட்டு, குக்கரை மூடி, 4-5 விசில் வரை வேக விடவும்.

ஆவி அடங்கியதும் திறந்து, நன்கு கிளறி, சூடாக பரிமாறவும்.

மேலும் அறிய