வெறும் 10 நிமிசத்துல... சிம்பிள் லஞ்ச் ரெசிபி!

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப், துவரம் பருப்பு – ¼ கப், காய்கறிகள் (விருப்பப்படி), கேரட் – 1, முருங்கைக்காய் – 1, வெண்டை – 4, சுரைக்காய் அல்லது பூசணிக்காய் – சிறிதளவு, சின்ன வெங்காயம் – 5, தக்காளி – 1, சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, புளி – சிறிய எலுமிச்சை அளவு, வெந்நீர் – ½ கப், எண்ணெய் / நெய் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – ½ டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ½ டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயம் – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி இலை – அலங்கரிக்க.

அரிசி மற்றும் துவரம் பருப்பை கழுவி, 3 கப் நீர், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 3 விசில் வரைக்கும் வேகவைக்கவும்.

தேவையான காய்களை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். விருப்பப்பட்டால் வெங்காயம், தக்காளி சேர்க்கவும்.

புளியை ½ கப் வெந்நீரில் கரைத்து வைக்கவும்.

வேகிய அரிசி-பருப்பில் காய்கறிகள், சாம்பார் பொடி, உப்பு, புளி நீர் சேர்த்து நன்றாக கிளறவும்.

எல்லாம் கலந்து ஒரு கொதி வரும் வரை சுடவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் சேர்க்கவும்.

மேலே கொத்தமல்லி இலை தூவி, சாம்பார் சாதத்தை பரிமாறவும்.

மேலும் அறிய