புரதச்சத்து குவிந்து கிடக்கும் இந்த சாதம்!

தேவையான பொருட்கள்

வடித்த சாதம் - 2 கப், நல்லெண்ணெய் - 5 ஸ்பூன், வேர்க்கடலை - 1/2 கப், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன், எள்ளு -1 tbsp, கடலைப்பருப்பு - 1 ஸ்பூன், கடுகு - 1 tsp, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தே.அ.

முதலில் கடாய் வைத்து எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றிக்கொள்ளுங்கள்

காய்ந்ததும் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்கு வறுத்துக்கொள்ளுங்கள். அவற்றை தனியா வைத்துவிட்டு எள்ளை மட்டும் தனியாக மீண்டும் வறுத்துக்கொள்ளுங்கள்.

மிக்ஸி..

இவை ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது வேர்க்கடலை சாதப்பொடி தயார். இதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக அதே கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளியுங்கள்.

பின் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள்.

கடலைப்பருப்பு பொன்னிறமாக வந்ததும் வடித்த சாதம் சேர்த்து அதன் மேல் அரைத்த வேர்க்கடலைப் பொடியையும், உப்பையும் சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளுங்கள்.

நன்கு பிரட்டியதும் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இரண்டு நிமிடங்களுக்கு சிறு தீயில் வைத்து அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் வேர்க்கடலை சாதம் ரெசிபி...

மேலும் அறிய