டிபனுக்கு தரமான சைடிஷ்... ஓட்டல் ஸ்டைலில் இப்படி செய்யுங்க!

பனீர் பட்டர் மசாலா செய்ய தேவையான பொருட்கள்

பனீர் - ஒன்னரை கப், முந்திரி -அரை கப், நறுக்கிய வெங்காயம்- 11/2 கப், நறுக்கிய தக்காளி- இரண்டு கப், தயிர்- அரை கப், இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 டீஸ்பூன், மிளகு -அரை டீஸ்பூன், கரம் மசாலா -அரை டீஸ்பூன், மிளகாய் தூள்- ஒரு டேபிள் ஸ்பூன், மல்லித்தூள்- ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன், பட்டர் -ஒரு டேபிள் ஸ்பூன், ஏட்டுடன் கலந்த பால் -கால் டம்பளர், எண்ணெய் -ஒரு டீஸ்பூன், மல்லித்தழை -கைப்பிடி அளவு, பட்டை - சிறு துண்டு, உப்பு -தேவைக்கு ஏற்ப

பன்னீரைப் மாரினேட் செய்தல்

தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூளை நன்கு கலந்து பன்னீருடன் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

முந்திரி பருப்பு - வெங்காயம் - தக்காளி விழுது தயாரிப்பு

முந்திரி பருப்பு, நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸியில் நன்கு அரைத்து விழுதாக்கவும்.

பன்னீர் வறுத்தல்

எண்ணெய் ஊற்றி, மாரினேட் செய்த பன்னீர் துண்டுகளை இரண்டு பக்கமும் பொன்னிறமாக வதக்கி எடுத்து வைக்கவும்.

மசாலா வதக்கல்

அகலான கடாயில் பட்டரை வைத்து, மிளகு, இஞ்சி, பூண்டு விழுதுகளை வதக்கவும்.

தக்காளி விழுது சேர்த்து வதக்கல்

அரைத்த தக்காளி விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

மசாலா தூவி பால் சேர்த்துக் கொதிக்க விடுதல்

மஞ்சள், மிளகாய், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி, ஏடு கலந்த பாலை ஊற்றி 5 நிமிடம் மூடி சமைக்கவும்.

தயார்!

வறுத்த பன்னீரை சேர்த்து கலக்கவும். மல்லித் தழை தூவி இறக்கி, சப்பாத்தி, பரோட்டா, நாண், ருமாலி ரோட்டியுடன் பரிமாறவும்.

மேலும் அறிய