சப்பாத்தி, ரொட்டி, பிரட்... அனைத்திற்கும் ஒரே சைடு டிஷ்!

தேவையான பொருட்கள்

பன்னீர் - 200 கிராம், சின்ன வெங்காயம் - 3 (நறுக்கியது), தக்காளி - 1 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 6, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 1, மிளகு தூள் - 1/2 டீஸ்பூன், சீரக தூள் - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க.

பன்னீரை துருவி தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

பின்னர் துருவிய பன்னீர், மிளகு தூள், சீரகத் தூள், உப்பு சேர்த்து 3 முதல் 5 நிமிடங்கள் வரை வதக்கவும்.

கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

மேலும் அறிய