ஈஸி ஈவ்னிங் ஸ்நாக்ஸ்: கசப்பு தட்டாமல் பாகற்காய் வடை

தேவையான பொருட்கள்

பாகற்காய் - 1 (நறுக்கியது), கடலைப்பருப்பு - 1 கப் (2 மணி நேரம் ஊற வைத்தது), உளுத்தம்பருப்பு - 1/4 கப் (2 மணி நேரம் ஊற வைத்தது), சின்ன வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது), பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), இஞ்சி - 1 துண்டு (நறுக்கியது), கறிவேப்பிலை - 1 கொத்து (நறுக்கியது), பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு.

ஊறவைத்த கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பை மிக்சியில் போட்டு, உப்பு, பெருஞ்சீரகம் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

அரைத்த மாவுடன் நறுக்கிய பாகற்காய், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

அரைத்த மாவை சிறு வடைகளாக தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சுவையான பாகற்காய் வடை தயார்!

மேலும் அறிய