சாஃப்ட் சப்பாத்திக்கு... டேஸ்டி குருமா!

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 2 (நறுக்கியது), பச்சை பட்டாணி - 1 கப், பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது), தக்காளி - 2 (நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), முந்திரி பருப்பு - 6-7, தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன், கசகசா - 1 டீஸ்பூன், எண்ணெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி இலைகள், உப்பு, தண்ணீர்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

முந்திரி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, ஆறவைத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, உருளைக்கிழங்கு, பட்டாணியை சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

அரைத்த விழுது, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

உருளைக்கிழங்கு, பட்டாணி வெந்ததும் கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து, சப்பாத்தியுடன் பரிமாறவும்.

அவ்வளவு தான்... சூடான சுவையான உருளை பட்டாணி குருமா தயார்!

மேலும் அறிய