ருசியான பீர்க்கங்காய் வைத்து சூப்பரான சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பீர்க்கங்காய் - 1, வெங்காயம் - 1, புளி - லெமன் சைஸ், காய்ந்த மிளகாய் - 6, உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன், தக்காளி - 1, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு - 1/4 ஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன், பெருங்காயத்தூள்-1 சிட்டிகை, கறிவேப்பிலை - 1 கொத்து.
அதே போன்று வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, உளுத்தம் பருப்பு சேர்த்து கொஞ்சம் பொன்னிறமாக வறுத்துக் கொண்டு பின் அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் கடாயில் அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி பின் புளி மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பின் அதில் அரிந்து வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து வதக்கி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். கலவை ஆறிய பிறகு, மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் கடுகு, உளுத்தம் பருப்பு,பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வைத்து சட்னியில் ஊற்ற வேண்டும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்