தயிர் சோறுக்கு பெஸ்ட்... உருளை வறுவலுக்கு சீக்ரெட் மசாலா!

தேவையான பொருட்கள்

வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 (நடுத்தர அளவு), எண்ணெய் - 2 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை - ஒரு கொத்து, மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி (உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப), உப்பு - தேவையான அளவு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை (விரும்பினால்).

வேகவைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்

கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறவும்.

உருளைக்கிழங்கு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.

தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.

மேலும் அறிய