புருஷன் - பொண்டாட்டி மாதிரி... மழை, வெயிலுக்கு ஏற்ற ரெசிபி!

எல்லா நேரத்திலும் அந்த ஐவருக்கும் பிடித்தமான ஒரு ஸ்னாக் தான் குழிப்பணியாரம் வித் கார சட்னி.

அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

குழிப்பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்

இட்லி மாவு - 2 கப், வெங்காயம் - 1 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), கறிவேப்பிலை - 1 கொத்து (நறுக்கியது), கொத்தமல்லி - 1/4 கப் (நறுக்கியது), எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ளவும்.

நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

குழிப்பணியார சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றி, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

சுவையான பணியாரம் தயார்!

கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் - 10-12, தக்காளி - 2, காய்ந்த மிளகாய் - 4-5, பூண்டு - 4-5 பல், எண்ணெய் - 2 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை - 1 கொத்து, உப்பு - தேவையான அளவு.

சின்ன வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை எண்ணெய் ஊற்றி வதக்கவும்.

வதக்கிய பொருட்களை ஆறவைத்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.

சட்னியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

உப்பு சேர்த்து கலக்கவும்.

சுவையான கார சட்னியும் தயார்!

இது இரண்டையும் சூடாக சாப்பிட்டு மகிழுங்கள்!

மேலும் அறிய