நாக்கில் வச்ச உடனே கரையும்... கரண்டியில் ஒட்டாத கேசரி!

Author - Mona Pachake

அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து சூடேறியதும், நெய் ஊற்றவும்.

நெய் நன்றாக உருகியதும் அதில் முந்திரி மற்றும் காய்ந்த திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் மீதம் இருக்கும் நெய்யில் ரவா சேர்த்து இளஞ்சூட்டில் வறுக்கவும். பச்சை வாசனை போகும் வரை மிதமான சூட்டில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் இதில் சர்க்கரை, உப்பு மற்றும் ஏலக்காயை இடித்து சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். நன்றாக கலந்தப் பின்னர் தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.

தேவைப்படின் கேசரி பவுடர் மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனை அப்படியே 3 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் மூடி வைத்து வேக விட வேண்டும். பின்னர் வறுத்து வைத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கி விட வேண்டும்.

அவ்வளவு தான் டேஸ்டியான ரவா கேசரி ரெடி. நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவைத்து மகிழுங்கள்.

மேலும் அறிய