குழந்தை ரசித்து சாப்பிட... செம்ம ஈவினிங் ஸ்நாக்ஸ்!

தேவையான பொருட்கள்

ரவை - 1 கப், தயிர் - 1/2 கப், தண்ணீர் - 1/2 கப், சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, சீரகம் - 1/2 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் (விரும்பினால்), கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு.

ஒரு பாத்திரத்தில் ரவை, தயிர், தண்ணீர், உப்பு மற்றும் சமையல் சோடா சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து, 20 நிமிடம் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்னர், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

வதக்கிய கலவையை ரவை கலவையுடன் சேர்த்து, கொத்தமல்லி இலைகளை தூவி, நன்கு கலந்து கொள்ளவும்.

பணியார கல்லை சூடாக்கி, எண்ணெய் தடவி, ரவை கலவையை ஊற்றி, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

சுவையான ரவை பணியாரம் தயார்! தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.

மேலும் அறிய