சாஃப்ட் இடியாப்பம்... மாவு இப்படி பிசையுங்க!

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு சேர்த்து, தேவையான அளவு கொதிக்கும் நீரை ஊற்றி கரண்டியால் கிளறவும்.

தண்ணீர் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளவும்.

மாவு ஓரளவு ஆறியதும் கைகளால் மிருதுவாக பிசையவும்.

மாவு சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இட்லி தட்டில் அல்லது வாழை இலையில் மெல்லிய நூலாக பிழியவும்.

இடியாப்பம் வைத்த தட்டை ஆவியில் வைத்து 5-7 நிமிடங்கள் வேகவைக்கவும்.

சுவையான இடியாப்பம் தயார்!

தேங்காய் பால், குருமா அல்லது சைட் டிஷ் உடன் சேர்த்து பரிமாறலாம்.

மேலும் அறிய