சோம்பேறி சிக்கன்... இத விட ஈஸி டிப்ஸ் இல்ல!

தேவையான பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ, சின்ன வெங்காயம் - 1 கப் (நறுக்கியது), தக்காளி - 1 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், தனியா தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிது, கொத்தமல்லி இலை - சிறிது (நறுக்கியது).

முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

மசாலா நன்கு வதங்கியதும் கழுவிய சிக்கனை சேர்த்து கிளறி விடவும்.

தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து, கடாயை மூடி 10-15 நிமிடங்கள் வேக விடவும்.

இடையில் சிக்கன் வெந்துவிட்டதா என்று பார்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கிளறி விடவும்.

சிக்கன் நன்றாக வெந்ததும், கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

அவ்வளவு தான்... சிம்பிளாக சோம்பேறி சிக்கன் தயார்!

மேலும் அறிய